நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

விடுதலை: பாவலர் கருமலைத்தமிழாழன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

ஆலைகளின்  கழிவுகளை  ஆற்றில்  சேர்க்கும்
            அநியாயப்   போக்கிற்குத்   தடைவி   தித்து
சோலைகளைத்   தோப்புகளைப்   பாது  காத்து
            சொரிகாற்றின்   மாசகற்றித்   தூய்மை   யாக்கி
சாலைகளின்   இருபுறமும்   மரங்கள்  நட்டுச்
            சரியாக   வளரவைத்துச்   சூழல்   பேணிக்
காலையிலே   எழுந்தவுடன்   கைகள்   வீசிக்
            கால்நடந்து   விடுதலையைத்   தருவோம்   நோய்க்கே !

அதிகார   ஆட்சிகளின்   ஏவ   லுக்கும்
            அரசியலார்   ஆர்ப்பாட்ட   வன்மு   றைக்கும்
பதிலேதும்   சொல்லாமல்   அமைதி   யாகப்
            பரிதாப  அடிமையராய்   வாழ்தல்   விட்டுப்
புதிதான   ஊழலற்ற   சமுதா   யத்தைப்
            புரட்சியிலே   நிறுவுதற்குத்   துணிவை   ஏற்று
விதிதன்னை   மாற்றியெல்லாம்   பொதுமை   யாக்க
            விடுதலையைத்   தந்திடுவோம்   அச்சத்   திற்கே !
 

குடிதனக்கு   விடுதலையை   அளித்தே   இன்பம்
            குடியேற்றி   வீடுதன்னை   ஒளிர   வைப்போம்
மடிதனக்கு   விடுதலையை   அளித்தே   கையின்
            மாவுழைப்பால்   நாடுதன்னை   உயர   வைப்போம் !
நடிப்பிற்கு   விடுதலையை   அளித்தே   உண்மை
            நட்பன்பால்  அனைவரையும்   அணைத்தே   நிற்போம்
துடிக்காத   தன்னலத்தைத்   துரத்தி   விட்டுத்
            துயர்போக்கும்   மனிதநேயம்   நெஞ்சில்  வைப்போம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.