நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

 விடுதலை: -ரெத்தின.ஆத்மநாதன்,

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

கொடிய விலங்குகளைக்
கூண்டைவிட்டு வெளியே விட்டால்
கொண்டாடி அவையுந்தான்
கூடித்திரியும் சுதந்திரமாய்!
நாட்டுமக்கள் விடுதலையோ
நல்லாட்சி நல வாழ்வில்!
பாட்டுப்பாடி வாழ்ந்த காலம் 
பரிணமிக்குமா இனியுந்தான்!
ஆட்சிசெய்ய வருவோரெல்லாம்
அப்பழுக்    கற்றவராய்
வாழ்ந்த    காலமின்று
வரலாறாகிப்  போனதையோ!
குற்றவாளி     இவரென்று 
உச்சநீதி   மன்றமே
உறுதியாய்ச் சொன்ன பின்பும்
வேறென்ன வேண்டுமிங்கு?!
மாண்புமிகு    என்றாலே
மதிப்புமிகு    என்பதுபோய்
கேடான வார்த்தையாய் அது
கீழாகிப்  போனதையோ!?
பணத்துக்காய்  கூவத்தூரில்
பரதேசிகளாய்  வாழ்ந்தவர்கள்
பண்புள்ள        இம்மண்ணில்
படுக்கவும்     தகுதியற்றவர்கள்!
நாலரை   ஆண்டுகள்
நல் மண்ணை இவராண்டால்
மீத்தேன்    கார்பனெல்லாம்
மேலெழும்பி   நாடழியும்!
வேண்டாம்    இவராட்சி
வேதங்களும்  தாங்காது!
மொத்தமாய்  இவரொழிந்தால்
முகிழ்க்கும் விடுதலை தமிழகத்தில்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.