நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

விடுதலை : என். நடராஜன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

சும்மாவா கிடைத்தது விடுதலை நம் நாட்டுக்கு ?

விடுதலைக்கு வித்திட்டு அறப்போர் நடத்திய
நம் முன்னோர் பலர் சுதந்திரக் காற்றை
சுவாசிக்காமலே மறைந்தது சோகம் !
இன்று சுதந்திரக் காற்று சுவாசிக்கும்
நம்மில் பலர் நம் விடுதலை போராட்ட
வரலாறு மறந்ததும் வேதனை ...வேதனை !
நம் முன்னோர் நமக்கு பெற்று தந்தார் நம்ம நாட்டு 
விடுதலை ! விடுதலை கிடைத்த மகிழ்ச்சிக்
களிப்பில்  நாம் இது வரை  திளைத்தது போதும் ! இனி
விதிவிலக்கு  ஏதும் இல்லாத  ஒரு விதிமுறை மாற்றம் நம்
மண்ணில் அரும்ப நாம்  விதைக்க வேண்டும் ஒரு வித்து
நம் மண்ணில் ! வளரும்  தலைமுறைக்கு நாம் போராடி
பெற்று தர வேண்டும் மீண்டும் ஒரு விடுதலை! ... நம் 
மண்ணுக்கு வேண்டும் விடுதலை... ஊழல்
சாம்ராஜ்ய அரசியலில் இருந்து !
நம் மண்ணுக்கு வேண்டும் விடுதலை... சாதி மத
பேத அரசியல் ஆதிக்கத்திலிருந்து !
நம் மண்ணுக்கு வேண்டும் விடுதலை ...
கண்ணென போற்றும் கல்வியை காசாக்கும்
நாசக்  கயவர் பிடியிலிருந்து !
நம் மண்ணுக்கு வேண்டும் விடுதலை ...
இன மதவாத தீவிரவாத கூட்டத்தின்
மிரட்டலிலிருந்து !
எடுப்போம் சபதம் நாம் இன்று ...
தொடுப்போம் ஒரு அறப்போர் மீண்டும் !
எதிர்வரும் தலைமுறைக்கு நாம் மாற்றிக்
கொடுப்போம்   ஒரு புதிய பாரத தேசத்தை !
விடுதலையின் புது விளக்கம் வரும் 
தலைமுறைக்கு பழக்கமாக மாறட்டும் !
விடியட்டும் ஒரு புதிய காலை! நம்
வளரும் தலை முறை சுவாசிக்கட்டும் மாசில்லா
புதிய  விடியல் காற்றை ஒரு தடையும் இல்லாமல் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.