விடுதலை : சீர்காழி .ஆர் .சீதாராமன்


காலம் கடந்த
முதிர்கன்னி கேட்டாள்
திருமண விடுதலை ,
சிட்டுக்குருவி கேட்டது
செல்போன் டவர்
விடுதலை ,
மாணவன் கேட்டான்
சுமக்கும் புத்தக
மூட்டைக்கு விடுதலை ,
அடைபட்ட கூண்டுக்
கிளி கேட்டது
பறக்க விடுதலை ,
சர்வாதிகாரம் ஆணவப்
பேச்சு அடக்குமுறை
அரசியல் மக்கள்
முழக்கம் விடுதலை ,
அடிமாடுகள் , கோவில்
கெடா , வேண்டியது
உயிர்பலி விடுதலை,
வானமும் பூமியும்
கேட்டது மீளா
உழைப்புக்கு விடுதலை ,
ஆற்றுப்பாதை கேட்டது
மணல் கொள்ளைக்கு
விடுதலை "
வளிமண்டலம் கேட்டது
மாசுபடும் சுற்று
சூழலுக்கு விடுதலை ,
ஆண் ஆதிக்க
பிடியில் இருந்து
பெண்கள் கேட்டது
விடுதலை ,
ஆதரவு இல்லா
ஆரசுக்கு என்றும்
இல்லை விடுதலை ,
விடுதலை என்ற
எதிர்கால தேடலை
நோக்கியே உலகமயப்
பயணம் "
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...