திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ஜல்லிக்கட்டை வென்றெடுக்க வாரீர்: பாவலர் கருமலைத்தமிழாழன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

தமிழினத்தின்   அடையாளம்   ஜல்லிக்  கட்டு            தமிழ்ப்பண்பின்  குறியீடு   ஜல்லிக்  கட்டுதமிழர்தம்  தொன்மைகுடி   ஆயர்   தம்மின்            தழைத்தகுல   விளையாட்டு   ஜல்லிக்  கட்டுதமிழ்நிலத்து   முல்லைநில   மக்கள்  தம்மின்            தன்மான  விளையாட்டு  ஜல்லிக்  கட்டுநிமிர்ந்தந்த   விளையாட்டை  நடத்து  தற்கே            நிறைதோளின்   தமிழாநீ   ஒன்று  சேர்வாய் !சிந்துவெளி   நாகரீகம்   உலகின்   மூத்த            சிறப்பான   தமிழர்தம்   நாக  ரீகம்சிந்துவெளி   அகழ்வுதனில்  கிடைத்த  காசில்            சித்திரமாய்   உள்ளதிந்த  எருதுச்  சின்னம்முந்தியுன்றன்  பாட்டன்முப்   பாட்ட  னெல்லாம்            முத்திரையைப்   பதித்தவீர   ஜல்லிக்  கட்டைஇந்தியாவின்  தடையுடைத்து  நடத்து  தற்கே            இருதோள்கள்   புடைத்தெழவே   தமிழா  வா வா !ஏந்திழையாள்   கைபிடிக்கக்   காளை  யர்கள்            ஏறுதனைத்   தழுவியவீர   விளையாட்டுதீந்தமிழர்   உயிர்கஞ்சா  மல்கொல்  லேற்றை            தீரமுடன்   அடக்கியவீர   விளையாட்டுஏந்திபாலை  கலித்தொகையும்   பெரும்பா  ணாறும்            ஏத்திபுகழ்   பாடும்வீர   விளையாட்டுமாந்தயின   முதல்விளை  யாட்டை   மீட்க            மாத்தமிழா ஒன்றிணைந்தே எழுந்து  வா வா !எருதுபிடி   மஞ்சுவிரட்டு  என்ற  ழைத்தே            ஏற்றமுடன்   ஊர்அலங்கா   நல்லூர்  தன்னில்பொருதுவிழுப்   புண்களினைப்   பெறுவ  தற்கே            பொழுதெல்லாம்   பயிற்சிபெற்ற   காளை  யர்கள்விருந்துண்ணல்   வீரவிளை  யாட்டென்   றார்த்து            விழிதிறந்து   காத்துள்ளார்  அடக்கு  தற்கேஅருந்தமிழா  தடைதன்னை   உடைப்ப  தற்கே            ஆர்ர்தெழுவாய்  தில்லிக்குன்   வலிமை  காட்டு !காளைகளைக்   கொம்பழுத்திப்   பிடிக்கும்   வீரக்            காளையர்தம்   ஆண்மைக்கே   நெஞ்சை   ஈந்துபாவையர்கள்   மணமுடித்த   தமிழ   மண்ணில்            பழம்வீரம்   காட்டுதற்கே  தடைவி  தித்தார்நாளையுன்றன்  வீரத்தைக்   காட்டு  தற்கும்            நல்முன்னோர்   விளையாட்டை   மீட்ப  தற்கும்தோளைத்தட்டி  எழுந்திடுவாய் !   தமிழா  வீரத்            தொன்மையினை   உலகுணரச்   செய்ய  வா வா !செங்காந்தள்   படவப்பூ   காயாம்   பூவைச்            செம்வீரக்   குறியீடாய்  சூடிக்  கொண்டுபங்கயப்பூ   முகப்பெண்ணை   மணப்ப   தற்கே            பாய்ந்துவரும்   வாடிவாசல்   காளை   தம்மைத்தங்கையால்   திமில்பிடித்து   அடக்கி  வென்று            தமிழ்வீரம்   காட்டுதற்குத்   தடைவி  தித்தார்இங்கந்தத்   தடைதகர்க்க  ஒன்று   சேர்ந்தேஇந்தியாவின்   தலைமைக்கு  உணர்த்த  வா வா!காங்கேயம்   புலிக்குளமாம்   அலங்கா  நல்லூர்            காரிபுள்ளி   செவலைகுரால்   வெண்கால்  என்றேதாங்கிபெயர்  கொண்டிருக்கும்   காளை   கள்தாம்            தாவிவரக்   கழுத்துதனைப்   பிடித்துத்   தொங்கிவீங்கிருக்கும்  தோள்வலியால்   அடக்கு   கின்ற            வீரவிளை   யாட்டிற்கே   தடைவி  தித்தார்ஈங்கந்தத்   தடைதகர்க்க  ஒன்றி  ணைந்தே            இடிமுழக்கம்   செய்தற்கே  எழுந்து  வா வா !பண்பாட்டின்   பெருவிழாவாம்   இளைஞ   ரெல்லாம்            பழம்வீரம்   வெளிகாட்டும்   விழுப்புண்   விழாவாம்மண்தமிழின்   பெயர்சொல்லும்   மரபு   விழாவாம்            மானத்தின்   விழாவிற்கே   தடைவி   தித்தார்கண்களிலே   கனலேற்றித்   தமிழா  உன்றன்            கண்ணான  விளையாட்டை  மீட்ப  தற்கேதிண்தோள்கள்   தட்டியெழு   நீதி  மன்ற            திறவாத   கதவுகளைத்   திறக்க   வாவா !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.