சூரிய தாகம்: வேம்பார் மு.க.இப்ராஹிம்


சுட்டெரிக்கும் வெயில்..!
வீட்டுக்கு ஒரு மரம்
நட்டு வைக்க நாதியில்லை..
வீதிக்கு ஒரு மரம்
விதி என ஆனது..!
குடிக்க தண்ணீர் கேட்டு
குடத்தோட
சாலையில போராட்டம்..
கேட்பார் யாருமில்லை..
தாகம் தீர்ப்பாரும் யாருமில்லை..!
வற்றிப் போன ஆறு குளம்
கானல் நீராய் கண்ணுக்கு ..!
வந்த மழை நீரும்
வீணாய் போகுது கடலுக்கு..!
சூரியனுக்கு பொங்கலிட்டு
நன்றி சொல்ல வழியில்லை..!
சூரியனே தாகத்துலே
தவிக்கிறப்ப என்ன செய்ய..?
மழை நீரை சேமிக்க
மனசு இல்லை நமக்கு..!
சூரிய தாகத்துக்கு
தீர்வு தான் யாரு சொல்ல..?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...