சூரிய தாகம்: லூர்து எஸ் ராஜ்


சூரியனின் தாகம் இப்போத திகமானது ; அதன்
சுட்டெரிக்கும் வெயிலலையோ சுழன்று வீசுது.
மேனியிலே வியர்வை ஊற்று பெருக்கெடுக்குது
மீண்டும் மீண்டும் நீரைநம் நாவு தேடுது.
பூமிப் பந்தை எரிப்பது போல் அனலும் வீசுது;
பொதிந்துள்ள கடல் நீரும் கொதித்துக் குதிக்குது.
எல் நினோ விளைவு என்றேல்லாரும் சொல்கின்றார்;
எப்படித்தான் இவ்வெப்பத்தை தாங்கிடுவோமோ?
புவிமுழுதும் காத்திடுமோர் குடையைச் செய்வோமா ?
அவியாமல் உலகங் காக்கும் மூடி செய்வோமா?
இனியும் நாம் தாமதித்துக் கொள்ளளலா குமோ?
மனிதன் நினைத்தால் மண்ணிலே ஆகாததுண்டோ ?
பச்சைப் பட்டுடுத்தி வைத்தால் பாதுகாப்பாம் ; பூமியின்
பறந்து விரியும் வனக்குடையால் வெப்பம் தீருமாம்; நாமும்
மரங்கள் நட்டு மாநிலத்தைக் காத்திடுவோமா? இந்த
மார்க்கமிதை மறவாமல் இன்றே செய்வோமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...