இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

சூரிய தாகம்: கவிஞர் மா.உலகநாதன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

ஆனாலும் உனக்கு ஆகாது
இவ்வளவு தாகம்;
ஒரே மூச்சில்
உலக நீரையெல்லாம்
உறிஞ்சி விடப் பார்க்கிறாய்;
உன் தாகமும் வேகமும்
இங்கு ஒரு புல்,பூண்டைக் கூட
விட்டு வைக்கவில்லையே!
தடாகத்துத் தண்ணீரெல்லாம் தடம் தெரியாமல் போய்விட்டன;
ஆயிரம் கரங்கள் கொண்டு
அள்ளிச்சென்றாயோ?
ஆயினும்,
மேகத்தோடு மென்காதல் பேசி,
மின்னி இடித்து மழை தரும் வள்ளலல்லவா நீ;
இதை ஆண்டாள்
தன் பாவையில் அன்றே சொல்லி வைத்தார்;
உன் தாகம் தீர்ந்த பின்
எங்களுக்காய் கொஞ்சம்
இ(ர)றங்கி வரச்சொல்வாயா
உன் மழைக் காதலியை?!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.