கைகோர்ப்போம்: முனைவர் மரியதெரசா


கைகோர்த்து கும்மியடித்த காலம் துறந்து
கை சேர்ந்து கணினியில் பெண்ணே நீ செயலாற்று
வையத்தில் ஆணும் பெண்ணும்
சமம் என்ற கைகோர்த்து முன்னேறு
பெண்ணடிமை பேசும் வீணர்களை முறியடித்து
பெண்ணுரிமை நீ நிலைநாட்டு
ஐயமின்றி சொல்லிடு சாதியில்லை பேதமில்லை
மண்ணில் பிறந்தோர் யாவரும்
மண்ணின் மைந்தர் என்றே கைகோர்த்து வாழ்ந்திரு
தையலோடு கை கோர்த்து திருமண நன்நாளில் இணைந்த பின்
எந்நாளும் பிரியாதே இல்லறத்தை நல்லறமாக்கு
கொய்யாத மலராக முதிர்கன்னி வாழ்வு
ஐயா நீ வரதட்சணை கொடுமையை
கைகோர்த்து நாடு கடத்து
பெய்யாத மழைக்கு காரணம் அறிந்து
கைகோர்த்து சுற்றுச் சூழலை பாதுகாத்திடு
நைந்தார் புவியில் இல்லா வண்ணம்
கைகோர்த்து நானிலத்தில் சமத்துவம் விளைத்திடு
பைந்தமிழை அழியாது காக்க
நம் நா தமிழ் பேச கைகோர்த்து
நானிலத்தில் சமத்துவம் விளைத்திரு
பைந்தமிழை அழியாது காக்க
நம் நா தமிழ் பேச கைகோர்த்து தீர்மானம் எடுத்திடு
சொல்லிய சொல்லின் படி
யாதும் ஊரே யாவரும் கேளீர் என
கைகோர்த்து வாழ்ந்து புவியை சொர்க்கமாய் மாற்று
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...