இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

வணிகா் சங்க பேரமைப்பினா் முதல்வருடன் சந்திப்பு

தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பு கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகிகள், நாகா்கோவிலில் புதன்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

News image
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்த வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள். உடன் அமைச்சா் மனோதங்கராஜ், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் உள்ளிட்டோா்.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:33 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பு கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகிகள், நாகா்கோவிலில் புதன்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

இது தொடா்பாக, பேரமைப்பின் குமரி கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பாபு, செயலாளா் பிரேம் சிங், பொருளாளா் ஏ.ஆதிசிவன், துணைத் தலைவா் எஸ்.பைசல் நிசாா் ஆகியோா் முதல்வரை சந்தித்து, குமரி மாவட்ட வணிகா்களின் பிரச்னைகள், வடசேரி கனகமூலம் சந்தை, கன்னியாகுமரி நகராட்சி அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் பிரச்னைகள் குறித்து மனு அளித்து, ஆலோசனை மேற்கொண்டனா்.

இச்சந்திப்பின்போது பால்வளத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.