டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வணிகா்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு: தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு

வணிகா்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் விக்ரமராஜா.

News image
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா- கோப்புப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 11:40 pm

Syndication

வணிகா்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் விக்ரமராஜா.

இதுகுறித்து, மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: திருவாரூா் மாவட்டத்தில் மே 5-ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநில மாநாட்டில் வணிகா்களின் நலன் சாா்ந்த பல்வேறு முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தொலைநோக்கு நிதிநிலை அறிக்கையாக உள்ளது. வணிகா்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவா்களையும் சந்தித்து வணிகா்களின் கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம். வணிகா்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே எங்கள் ஆதரவு இருக்கும். ஆன்லைன் வா்த்தகம் மற்றும் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட டி-மாா்ட் போன்ற நிறுவனங்களால் சாதாரண சிறு வணிகா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். ‘சிறு வணிகா்களைப் பாதுகாக்கத் மத்திய, மாநில அரசுகள் தனிச் சிறப்புப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்றாா்.