கைகோர்ப்போம்: பொன். குமார்


ஒரு கை
ஓசை எழுப்பாது.
இரு கை
என்றும் ஓயாது.
இணைந்த கைகளே
இலக்கை எட்டும்.
எதிர்ப்பவர்களை
என்றும் விரட்டும்.
அவரவர் பிரச்சனைக்கு
அவரவர் நடத்துகின்றனர்
போராட்டம்.
அவ்வவ்போது நடத்துகின்றனர்
ஆர்ப்பாட்டம்.
அரசுச் செய்கிறது
அலட்சியம்.
கண்டு கொள்ளாமல்
நாமிருந்தால்
நாம் போராடும் போது
தனித்திருப்போம்.
கை கோர்த்தால்
கை கூடும் என்பதற்கு
முன்னுதாரணம்
மெரினா போராட்டம்.
கோரிக்கையாளர்களுடன்
கை கோர்ப்போம்.
கை கூடி வரும் வரை
களம் காண்போம்.
ஒரு கை பார்ப்போம் என்போரை
ஓரம் கட்டுவோம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...