கைகோர்ப்போம்: கா. மகேந்திரபிரபு


மாற்றங்கள் நிகழ
நாடு வளம் பெற
அடைமழை கொட்ட
வறட்சி மாறி பசுமை பெற
மாரியை கை கூப்பி
கை கோர்த்து அழைப்போம் !
மனிதம் மலர
வறுமை ஒழிய
கனவுகள் மெய்யாக
கைகள் ஒன்று சேரட்டும் !
எதிர்மறை எண்ணங்கள் மறைய
எதிர்பார்ப்புகள் உடனே நிகழ
எதிர்கால விதைகளைத் தூவ
என்றும் ஒன்று கூடி உழைப்போம் !
பொறாமையை பொசுக்கி
போட்டி போட்டு உழைத்து
அறிவுடன் அன்புடன் கூடி
கைகோர்ப்போம் - வெல்வோம் !
காய்ந்த விளைநிலங்கள்
கடகடவென விலைபோகாமல் இருக்க
கைகோர்ப்போம் கழனியை காக்கவே !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...