கைகோர்ப்போம்:- சீர்காழி .ஆர் .சீதாராமன் .


" கலாச்சாரமும் பண்பாடும்
கால மாற்றாத்தால் நாகரீக
வளர்ச்சியால் சிதைந்து
விடாமல் காக்க வழிகாட்ட
பலமாக கைகோர்ப்போம் "
" மாற்றுத்திறனாளிகளை
திருநங்கைகளை ஆட்டிசம்
குழந்தை முதியோர்களை
விழி மேல் வழி வைத்து
போற்றிட கைகோர்ப்போம் "
" காடுகளை பறவைகளை
மரங்களை வீட்டு விலங்குகளை
சின்ன சின்ன மண் புழுக்களை அழிய
விடாமல் தடுக்க இணைந்து
கைகோர்ப்போம் "
" நதிகளை இணைக்க
சமத்துவம் மலர உண்மையும்
நேர்மையும் காண உழைப்பை மதிக்க
இயற்கையை துதிக்க,
விடாமல் கைகோர்ப்போம் "
"மண்வளம் கூட பசுமை செழிக்க
அறுவடை கொழிக்க மனித உள்ளம்
மணக்க மண்வாசனை பரவ என்றும்
கைகோர்ப்போம் தோள் கொடுப்போம் "
" கொடுமையை உயர் மன அழுத்தங்களை
கடும் துயரங்களை தோல்விகளை
வேரறுத்து முட்டி முளைக்கும்
விதை போல் விடியலை தேட
கைகோர்ப்போம் என்றும் "
" நாளைய தலைமுறை செழிக்க
விஞ்ஞான வளர்ச்சி சிகரம்
தொட பசுமை எங்கும் நிறைய
சோதனைகளை சாதனைகளாக்க
தூயமனதோடு நம்பிக்கையோடு
கைகோர்ப்போம் "
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...