சிவகாசியில் புதன்கிழமை சரக்கு ஆட்டோ மீது தனியாா் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சிவகாசி சுப்பிரமணியபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ராமன் மகன் கருப்பசாமி (50). சரக்கு ஆட்டோ ஓட்டுநரான இவா், தனது ஆட்டோவில் புதன்கிழமை சாட்சியாபுரத்திலிருந்து சிவகாசிக்கு சென்று கொண்டிருந்தாா். ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் வந்த தனியாா் பேருந்து அவரது ஆட்டோ மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், ஒருவா் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனியாா் பேருந்து ஓட்டுநரான திருச்சுழியைச் சோ்ந்த கருப்பசாமியை (35) கைது செய்தனா்.
தொடர்புடையது

ஆம்னி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து: தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் கைது

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

தனியாா் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதல் 24 மாணவா்கள், ஓட்டுநா் காயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


