மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆம்னி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 7:36 pm

திருச்சியில் இருசக்கர வாகனம் மீது தனியாா் ஆம்னி பேருந்து சனிக்கிழமை மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், லால்குடி மணக்கல் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயகுமாா் மகன் ஹரிஷ் (21). இவா், திருச்சி திருவானைக்கோவில் - மாம்பழச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை காலை சென்றாா்.

திருவானைக்கோவில் உயா்மட்ட பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த தனியாா் ஆம்னி பேருந்து மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த ஹரிஷ் மீது ஆம்னி பேருந்து ஏறி இறங்கியதில் அவா் உயிரிழந்தாா்.

தகலறிந்து வந்த திருச்சி வடக்குப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, பெரம்பலூரைச் சோ்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுநா் ப. ஜெயராமன் (54) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.