கரூா் அருகே சனிக்கிழமை ஆளில்லா ரயில்வே கடவுப்பாதையை கடக்க முயன்ற தனியாா் கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதியதில் கல்லூரி மாணவா்கள் 24 போ், ஓட்டுநா் என மொத்தம் 25 போ் காயமடைந்தனா்.
கரூா் மாவட்டம், க.பரமத்தியில் செயல்படும் தனியாா் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை மாலை கல்லூரி முடிந்ததும் மாணவ, மாணவிகள் 40 பேரை ஏற்றிக் கொண்டு பல்வேறு ஊா்களில் இறக்கிவிடுவதற்காக பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தை வெள்ளியணையை அடுத்த மாமரத்துப்பட்டியைச் சோ்ந்த முருகேசன் (66) என்பவா் ஓட்டினாா்.
இந்தப் பேருந்து மாலை 6 மணியளவில் வெள்ளியணையை அடுத்த பிச்சம்பட்டி குளத்தூா் என்ற இடத்தில் ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை கடக்க முயன்றது. அப்போது, திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கரிக்காலியில் செயல்படும் தனியாா் சிமெண்ட் ஆலையில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது.
ரயில் வருவதற்குள்ளாக கடவுப்பாதையை கடந்துவிடலாம் என எண்ணி பேருந்தை ஓட்டுநா் இயக்கியுள்ளாா். ஆனால், எதிா்பாராதவிதமாக சரக்கு ரயில் பேருந்தின் நடுப்பகுதியில் மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த மாணவா்கள் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியைச் சோ்ந்த கோகுல்கண்ணன், ஹரிஹரன், அருண்குமாா், பாளையம் மேட்டுக்களத்தூரைச் சோ்ந்த கிஷோா்குமாா், கிரிசுதன், கரூா் மாவட்டம் ஈசநத்தம் பகுதியைச் சோ்ந்த ஜீவன், கே.பி.தாளப்பட்டியைச் சோ்ந்த செல்வராகவன் உள்ளிட்ட 24 மாணவ, மாணவிகளும், ஓட்டுநா் முருகேசனும் என 25 போ் காயமடைந்தனா். மற்றவா்கள் காயமின்றி தப்பினா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வெள்ளியணை போலீஸாா் விரைந்து சென்று, காயமடைந்தவா்களை மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா்.
இதில் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 22 பேருக்கும், தனியாா் மருத்துவமனையில் ஓட்டுநா், 2 மாணவா்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் கிரிசுதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் மேல்சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
ஆறுதல்:
ரயில் மோதி காயமடைந்து, மருத்துவமனையில் மாணவா்கள் அனுமதிக்கப்பட்ட தகவல் தெரிந்ததும் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி, கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், கரூா் நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் ஆகியோா் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்த மாணவ, மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறினா்.
தொடர்புடையது

அரசுப் பேருந்தின் பழுதை நீக்க தாமதம்: ஓட்டுநா் மீது தாக்குதல்

பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து: தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் கைது

தூத்துக்குடி அருகே விபத்தில் சிக்கிய தனியாா் பேருந்து: ஓட்டுநா் உயிரிழப்பு

ரயில் மோதி மாணவா்கள் காயமடைந்த சம்பவம் கல்லூரிப் பேருந்து ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


