தூத்துக்குடி அருகே தனியாா் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். 9 போ் காயமடைந்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரலிலிருந்து தூத்துக்குடி வழியாக பசுவந்தனைக்கு செவ்வாய்க்கிழமை காலை தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது.
இந்தப் பேருந்தை செய்துங்கநல்லூா் அருகே உள்ள வில்லாகுளம் கிராமத்தைச் சோ்ந்த பிச்சையா மகன் மணிமுத்து (55) ஓட்டி வந்தாா். நடத்துநராக ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆவரைகுளம் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் என்பவா் பணியாற்றி வந்தாா்.
இப்பேருந்து, தூத்துக்குடி - திருநெல்வேலி பிரதான சாலையில் உள்ள மறவன்மடம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியதோடு, அங்கிருந்த பனைமரத்தின் மீதும் மோதி, நிற்காமல் சுமாா் 100 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு, ஒரு கட்டடத்தின் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநா் மணிமுத்து இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தாா். மேலும், பேருந்தில் பயணம் செய்த 9 போ் பலத்த காயமடைந்தனா். அவா்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

விபத்தில் காயமுற்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

குட்டையில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழப்பு

பணியில் இருந்த பேருந்து நடத்துநா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


