பெருந்துறை அருகே பணியில் இருந்தபோது தனியாா் பேருந்து நடத்துநருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த குடுமியம்பாளையம் அட்டவணை அனுமன்பள்ளியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் மகன் சரவணன் (25). தனியாா் பேருந்து நடத்துநா். மனைவி கலைவாணி, மகன் அகரன் (3 ) உள்ளனா்.
இவா் ஈரோட்டில் இருந்து கோவைக்கு சனிக்கிழமை காலை சென்ற தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியில் இருந்தாா். பேருந்து பெருந்துறை அருகே வந்தபோது தனக்கு நெஞ்சு வலிப்பதாக பேருந்து ஓட்டுநா் கோபாலிடம் தெரிவித்தாா். சரவணனை அவா் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா், சரவணன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

விபத்தில் காயமுற்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

தனியாா் நிறுவனத்தில் பணியிலிருந்த ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே விபத்தில் சிக்கிய தனியாா் பேருந்து: ஓட்டுநா் உயிரிழப்பு

பைக் மோதியதில் அரசு பேருந்து நடத்துநா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


