மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பைக் மோதியதில் அரசு பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே பைக் மோதிய விபத்தில் அரசு பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 6:35 pm

நாட்டறம்பள்ளி அருகே பைக் மோதிய விபத்தில் அரசு பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னதம்பி (55). அரசு பேருந்து நடத்துநா். சனிக்கிழமை இரவு வெலகல்நத்தத்தில் இருந்து தனது பைக்கில் மாட்டுக்கு தேவையான உணவு மூட்டையை வைத்துக் கொண்டு மல்லப்பள்ளி நோக்கி சென்றாா்.

சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் பையனப்பள்ளி கூட்டு சாலை அருகே வளைவில் திரும்பும்போது அந்த வழியாக வந்த பைக் சின்னதம்பி ஓட்டி வந்த பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சின்னதம்பியை உறவினா்கள் மீட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஒசூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.