இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

கைகோர்ப்போம்:   கவிஞர் இரா .இரவி 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

எது நம்மைப் பிரிக்கிறது என்ற பார்க்காமல் 
எது நம்மை இணைக்கின்றது என்று பார்ப்போம் !

உலகத்தமிழர்கள் யாவரும் ஒன்றிணைவோம் 
ஒப்பற்ற உயர்ந்த தமிழால் ஒன்றுபடுவோம் !

தமிழைத் தமிழாகவே பேசிப் பழகிடுவோம்
தமிங்கிலம் பரவுவதைத் தடுத்தி நிறுத்திடுவோம் !

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்றனர் அன்று 
ஒன்றுபடுவோம் வாழ்வில் உயர்ந்திடுவோம் !

சாதியை மறப்போம் மதத்தை மறப்போம் 
சகோதரர்களாக அனைவரும் சங்கமிப்போம் !

தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை 
தவிடு பொடியாக்கி ஒன்று சேர்ந்திடுவோம் !

உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ் 
உலகில் தோன்றிய முதலினம் தமிழினம் !

உலகில் தமிழினம் இல்லாத நாடே இல்லை 
உலகம் முழுவதும் பரந்து வாழ்வது தமிழன் !

உலகிற்குப்  பொதுமறை தந்தது தமிழினம் 
உலகம் வியக்கும் கோயில்கள்  கட்டியது தமிழினம் !

கரிகாலன் கட்டினான் கல்லணை அன்று 
காலகாலமாய் நிலைத்து நிற்கின்றது இன்றும் !

வியத்தகு சாதனைகள் நிகழ்த்தியது தமிழினம் 
விண்ணிலும் சாதனைகள் புரிந்தது தமிழினம் !
 

வீரத்தில் யாருக்கும் அஞ்சாத இனம் தமிழினம் 
வீரத்தை உலகிற்குக் கற்பித்த இனம் தமிழினம் !

அச்சம் என்பதை அறியாத இனம் தமிழினம் 
அன்பிற்கு அடிபணியும் இனம்  தமிழினம் !

ஆணவம் அதிகாரம் கண்டு அசராத இனம் 
அகிலத்தை ஆண்ட இனம் தமிழினம் !

சிதறிக் கிடைக்கும் தமிழர்கள் கைகோர்ப்போம் 
சிகரம் தொட அணிவகுப்போம் வாருங்கள் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.