இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

கை கோர்ப்போம்: -திருமதி மங்களாத்மா

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

கணவருடன் கை கோர்த்து
காதவழி  நடந்தாலும்
களைப்பு தெரிவதில்லை
களிப்பு குறைவதில்லை!

காவியத்தலைவி கண்ணகி
கணவன் கோவலுடன்
பாண்டியநாடு நோக்கி
பாங்காய்க் கை கோர்த்தாளே!

தொழிலாளர் கை கோர்த்தே
தொழிற் புரட்சி  தொடங்கிற்று!
விவசாயி கை கோர்த்தால்தான்
வீட்டிற்குள் உணவு வரும்!

அமைதியான    வாழ்வு    வேண்டி
நாம் அனைவருமே கை கோர்ப்போம்!
பகைமை  தனை  விட்டொழித்து
பண்புடனே கை கோர்ப்போம்!

எல்லா மனிதருமே இனிதான உறவென்று
உள்ளம் நிறைந்து உறுதியாய்க் கைகோர்ப்போம்!
பள்ளத்து மனிதர்களும் பக்குவமாய் முன்னேற
பாகுபாடு பாராமல் பலமாய்க் கைகோர்ப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.