இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பச்சை நிலம்: வெற்றிப் பேரொளி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

வறண்டிட்ட  ஆறு!  வழயில்லா வாய்க்கால்! 
மறந்திட்ட   மழைபெய்யா  வானம்! - இறப்பதனின் 
எல்லை  வரைச்செல்லும் ஏருழவன்   காண்பானோ
நெல்விளையும்  பச்சை நிலம்?

மணல்சுரண்டிக்  கொழுத்திட்ட  மாபாத  கர்தாம் 
பிணமாக்கி  ஆற்றைப்  புதைத்தார்!  -  அணங்கே! 
காரின்றி  வானமும்  காயும்  அதுபோல  
நீரின்றிப்  பச்சை  நிலம்!

விவசாயி  கண்ணில்  விரிகிறது   ஏக்கம்!
சவமாகும்  முன்சாத்  தியமா?  -  தவமதனின் 
இச்சை  வரம்போல்  இளநாற்று  காற்றிலாடும் 
பச்சை  நிலத்தின்  பரப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.