பச்சை நிலம்: ரெத்தின.ஆத்மநாதன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

பச்சை நிலம் பார்த்திடவே பரிதவிக்குது மனசுபார்வையில் படும் நிலமோ எல்லாமே தரிசு!இச்சை மிக க் கொண்டே எங்கணும் சுற்றினாலும் உச்சி வெயில் தலையினிலே உறைத்ததுதான் பரிசு!கச்சை கட்டி வாளெடுத்து காணும் மரமெல்லாம் வெட்டிஉச்சக் கட்ட வருமானம் கண்டதுதான் தப்போ?!பச்சை நிலம் கொட்டருவி பாய்ந்தோடும் ஆறு நீண்ட நெடு மலைகள் நெருங்கிய மரக் காடு சூழ்ந்தடிக்கும் இளந்தென்றல் சுகமான சீதோஷ்ணம்இவைதானே மனிதனுக்கு இயற்கை தரும் பரிசு!இவையெல்லாம் பெருமளவில் இங்கிருக்க வேண்டுமெனில்மரம் வேண்டும்! மழை வேண்டும்!மனவுறுதி மிக வேண்டும்!ஆள்பவர்கள் மக்களுக்கு அரணாய் நின்றால்தான்ஆளப்படும் மக்கள் அனைத்தையும் சாதிப்பர்!வேண்டாமென்பதைத் திணிக்கும் அரசு வேண்டுபவற்றைத் தடுக்கும் அரசுஇருக்கும் வரையில் எல்லாம் தலைகீழே!பல்லாயிரம் பொய் சொல்லி பதவிக்கு வந்த பின்புபெட்டி வாங்குவதே பெருந்தொழிலாய்ப் போனதிங்கு!ஓட்டுப் போடுகையில் உத்தமரைப் பார்க்காமல்காசுக்காய் வாக்கைக் கனிவாய் விற்றுவிட்டு'கேட்' வேண்டாம் 'நீட்'வேண்டாம் விலக்கொன்றே வேண்டுமென்றுலஞ்சத்திலேயே வாழ்வை நலமாய் அமைப்பதென்று இந்தச் சமுதாயம் எப்போது மாறியதோஅப்போதே பச்சை நிலம் அந்தோ!சருகாயிற்று!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...