பச்சை நிலம்: ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்


போட்டது முளைத்தது
எங்க பாட்டன் காலத்தில்
பஞ்சம் பசி பட்டினி ஏதும்
கொஞ்சமும் நெருங்கவில்லை
இட்டதெல்லாம் இயற்கை உரம்
எப்போதும் பச்சை தான் எங்கநிலம்
எங்கிருந்தோ வந்தது
எமனாக சீமைக் கருவேல்
வெட்ட வெட்ட வளர்ந்தது
வீதியெங்கும் முளைத்தது
தண்ணீரையெல்லாம் உறிஞ்சதால
கருகிருச்சே பச்சை நிலம்.
விளைச்சல் குறைஞ்சதால
சொன்னாங்களே பல வழி
அதைக்கேட்டுப் போட்டோமே
ரசாயன உரத்தை அள்ளி
மண்ணு மலடாச்சு
எங்க வயல் வீட்டு மனையாச்சு.
நெல்லு கரும்பு என
பொன்னா விளைஞ்ச பூமி
கல்லா முளைச்சிடுச்சி
ரசாயன உரமும் கருலேல மரமும்
கருவ அறுத்த பின்னே
எங்கே இருக்கும் என் பச்சை நிலம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...