இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

 பச்சை நிலம்: உத்ரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

பச்சை நிலமாய்த்தான் பச்சைப் பசேலென்றுபாட்டன்   காலத்தில்    பாரதம்    இருந்தது!நம்மவர்கள் நாட்டையாள நாம் அனுமதித்ததும்வந்தது நமக்கு வினை!பசுமைக்கும் பேராபத்து!பச்சை என்றும் எண்ணாமல் பாவபுண்ணியம் பாராமல்கோடரி எடுத்ததனால் நாடு கொலைக் களமாயிற்று!அமைச்சர் அதிகாரிகள்   அவர்களின்   உறவென்றுகூட்டுக் கொள்ளையாய் கூடாரம் போட்டு நித்தம்நாட்டு நலன் மறந்து நம் பிற்கால நினைவுமின்றிபேயாய்ப் பணமொன்றோ பெரிதென்று எண்ணி நாளும்குட்டிச் சுவராக்கி விட்டார் நாட்டை க் கொடும்பாதாளத்தில்  தள்ளி  விட்டார்  நல்  வீட்டை!அமைச்சர் அனைவருமே இன்று அதிபதி பல கோடிக்குஅவரின் நிழல் நின்றோரும் அவரது பாதையிலேஊரை நன்கடித்து உலையில் போடும் கூட்டமாய்மாறித்தான் போனார்கள் மானம் வெட்கமின்றி!நல்லவர்கள் வாய்மூடி நமக்கென்ன என்றிருந்ததனால்வானமும் பொய்த்தது!வளங்களும் விடை பெற்றன!வேலிகளே பயிரை வேகமாய் மேய்ந்ததனால்ஊர் படர்ந்த    பசுமை   ஓடியே    போயிற்று!பசுமையைக் காத்திடும் பாமரனின் வாழ்வின்று சூனியமாய் மாறி   சுடுகாட்டில்   கிடக்கிறது!வேதம் அறிந்தோர்கள் விவேகம் உடையோர்கள் செய்வதறியாது திகைத்துப்போய் மயங்கி விட்டார்!லஞ்சத்தை ஒழிக்கும் லட்சியத்தை மிகமறந்து ராமர் கோயில்கட்ட நம்மவர்கள் முனைகின்றார்!இருக்கும் கோயில்களில் இறைவனைத் தொழுதாலேஈரேழு  பிறவிகளும்  ஏகமாய்  ஈடேறும்!ந திகளை இணைத்தாலே ராமர் மிக மகிழ்வார்பாரதமும் முன்னேறி பாரினில் மிகவுயரும்!அடாவடி அரசியலும் அவர்துணை அதிகாரிகளும்குழப்பும் கோர்ட்டுகளும் கூடாத உறவுகளும்திருந்தினாலே  போதும் நல் சீர்பெறும் பாரதமே!ஏழைகள் அனைவரின் இயலாமை போக்கினாலே இவ்வுலகம் பசுமையாகும்!இதயங்கள் இனிதாகும்!பச்சை நிலமாகிப் பாரதம் செழுமை பெறும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.