இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பச்சை நிலம்:  கவிஞர் இரா .இரவி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

பச்சை நிலம் முன்பெல்லாம் இருந்தது 
பச்சை நிலம்  இன்று இங்கு பறிபோனது !

வீட்டடி  மனைகளாக்கிப் பணம் சேர்த்தனர் 
விளை நிலங்களை விடுகளாக்கி மகிழ்ந்தனர் !

எரிவாயு குழாய் பதிக்க நிலம் அபகரித்தனர் 
எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தனர் !

மீத்தேன் எடுக்க என்று  நிலம் பறித்தனர் 
மீளமுடியாத சோகத்தை மக்களுக்குத் தந்தனர் !

ஆபத்தான அணு உலைகளை வைத்தனர்
அடுக்கடுக்காக எண்ணிக்கையை உயர்த்தினர் !

நவீன மருத்துவமனைக்கும் மட்டும் இங்கு 
நிலம் இல்லை என்று வேறு மாநிலம் போனது !

குளிர்பான நிறுவனங்கள் எல்லாம் ஆற்று நீரை 
கொள்ளையடிக்க அனுமதி வழங்கினர்! 

சோலை வனங்களை பாலைவனம் ஆக்கினர்
சோர்வில் உழவனை நிலை குலைய வைத்தனர் !

பச்சையம் எல்லாம் பறிபோனது நிலத்தில்  
பாலைவனத்திலும்  மோசமானது நிலம் !

வெடிப்புகள் வெடித்து  தரிசாகப் போனது  நிலம் 
வெறுப்புடன் உயிர் மாயத்தனர் உழவர்கள் !

கண்ணும் எட்டும் தூரம் வரை பச்சை அன்று 
கண்ணும் எட்டும் தூரம் வரை வறட்சி இன்று !

சாலை போடுவதாகச் சொல்லிச் சாய்த்தனர் 
ஆலை அமைக்க என்று  சாய்த்தனர்  மரங்களை !

பச்சை நிலம் நேரடியாகக் கண்டோம் அன்று 
பச்சை நிலம் படத்தில் காண்போம் இன்று !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.