இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பச்சை நிலம்:   கவிஞர் கே. அசோகன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

பச்சை நிலத்தில் பயிரும் வளர்ந்தே
பகிர்ந்து உண்டோமடி பசுங் கிளியே!
பச்சை நிலத்தை பாழ் படுத்தியே
பழுப்பாக்கி விட்டோமே பசுங் கிளியே!
பச்சைப் புல்வெளியில் தடம் பதித்தே
பரசவமாகி நின்றோமே பசுங் கிளியே
இச்சையோடு ஏர்தூக்கி நிலத் திலே
இளங்கதிரில் உழுதானடி பசுங் கிளியே!

உண்பதற்கு உண்டான உணவ தனின்
உற்பத்தி குறைத்தோமே பசுங் கிளியே!
கண்மயக்கும் மாயைக் காட்டி டும் 
காட்சியில் மகிழ்ந்தோமே பசுங் கிளியே
தண்நிலவு குளிர்வையும், தடா கத்தின்
தன்னெழில் தள்ளினோமே பசுங் கிளியே
எண்ணிலா வளங்களையே சூறை யாடி
இடர்தான் படுகின்றோம் பசுங் கிளியே!
        
பசுமைவண்ண காடதனில் தீயை மூட்டி
பாழ்படுத்தி பார்த்தோமே பசுங் கிளியே!
பசும்காடுகள் நமக்கென்றே பங்கு போட்டே
பெரும்மாளிகை எழுந்தனவே பசுங்கிளியே!
திசையெட்டும் கண்குளிர அழகழ காய்
தோப்புகளும் இருந்தனவே பசுங் கிளியே!
திசையெட்டு தூரமெங்கும் களர் நிலமாய்
தெரிகின்றதே வண்ணவண்ண  பசுங் கிளியே !

விண்ணிலே ஏவுகணைகள் நித்தமுமே
விட்டோமடி ஆசையாய் பசுங் கிளியே!
மண்ணிலே நீரின்றி மடிந்த போதும் 
மயக்கத்தில் உள்ளோமாடி பசுங் கிளியே!
மண்ணுக்கு மழையளிக்கும்  நீல வான
மேகத்தையும் கலைத்தோமே பசுங் கிளியே!
விண்ணுக்கு போகின்ற கால மென்றே
வீராப்பாய் வாழ்வதேனோ ? பசுங்கிளியே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.