இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பச்சை  நிலம்: பாவலர் கருமலைத்தமிழாழன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

பச்சைநிலம்  போல்வயல்கள்  பட்டு  டித்திப்            பருவமெய்த   மங்கையவள்   முகத்தைப்   போலஇச்சையினைத்   தூண்டுமெழில்  பயிர்க  ளாக            இளங்காற்றில்   கொடியசைதல்   போல  சைந்துமூச்சினிலே  முற்றியநெல்   மணத்தைச்  சேர்த்து            முப்போகம்   விளைந்திட்ட   தஞ்சை   மண்ணோபேச்சிழந்தே   ஊமையான   பேச்சா   ளன்போல்            பெப்பெப்பே   ஆனதின்று   நீரே  யின்றி !பெய்தமழை   பொய்த்திடவும்   பாய்ந்த   ஆறோ            பெரும்வழக்கில்   அடைப்பட்டு   முடங்கிப்   போகசெய்தமூன்று   போகமது   ஒன்றாய்   ஆகிச்            செய்வதற்கு  வழியின்றி   அதுவும்   போகமெய்குறுகிப்   பெற்றகடன்   அடைப்ப  தற்கு            மெய்யாக   ஒருகாசும்   கையி   லின்றிஉய்யவழி   தெரியாமல்    வரிசை   யாக            உயிர்தன்னை   விடுகின்றார்   உழவ   ரின்று !நலமாக   நாமுண்ண   நலிவை  யேற்று            நாளுழைத்த   உழவரின்று   வாடு  கின்றார்உலகத்தைக்   காத்தவனோ   பயிரைக்   காக்க            ஊரின்முன்   நிற்கின்றான்   கையை  ஏந்தி !குலம்காக்கக்   குலத்தொழிலாம்   விவசா  யந்தாம்            குலைந்திடாமல்   காப்பதற்கே   தில்லி   மண்ணைக்களமாக்கிப்   போராடும்   விவசாய்  கட்குக்            கரம்கொடுப்போம்  பசும்நிலத்தைக்   காப்போம்   வாரீர் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.