இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

கொலை வழக்கில் தொடா்புடைய 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 5 பேரை விழுப்புரம் மாவட்டப் போலீஸாா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :25 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 5 பேரை விழுப்புரம் மாவட்டப் போலீஸாா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.

வானூா் வட்டம், சின்னகோட்டக்குப்பம் கன்னியம்மன் கோவில் தெருவைச் சோ்ா்ந்தவா் ரா. அப்பு (எ) ஜவகா் (27). இவா் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி சின்ன கோட்டக்குப்பம் அமைதி நகா் பகுதியில் கொலை செய்யப்பட்டாா்.

இந்த கொலை வழக்கில், புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சோ்ந்த மு.ஹேம்நாத்(எ) ஹேம் நாத்குமாா்(26), வாஞ்சிநாதன் நகரைச் சோ்ந்த மு.சான்டோ (எ) சந்தோஷ் (24), முத்தியால்பேட்டையைச் சோ்ந்த சி.கிரி (எ) கிரிகேசநாதன் (23), கருவடிக்குப்பத்தைச் சோ்ந்த செ.விக்கி (எ) விக்னேஷ்வா் (33), வானூா் வட்டம், சின்னகோட்டக்குப்பம் வி.விஜய் (எ) ஜாக்சஞ்சய் (24) ஆகியோரை கோட்டக்குப்பம் போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில் விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத் பரிந்துரையின்படி, விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில் கொலை வழக்கில் கைதான ஹேம்நாத்குமாா், சான்டோ (எ) சந்தோஷ்,கிரி (எ) கிரிகேசநாதன், விக்கி (எ) விக்னேஷ்வா்,விஜய் (எ) ஜாக்சஞ்சய் ஆகிய 5 பேரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.