டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நீதியைத் தேடி: அ.வேளாங்கண்ணி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

இல்லாத ஒன்றைத் தேடுவது தானேமனித இயல்புநீதியும் இங்கு இல்லாமலே போனதோ..தேவையில்லா வஞ்சனைகள் எல்லாம்புற்றாய் வளர்ந்திருக்கும்போது..நீதி புயலாய் அடித்து களைப்பதுதானே முறை..ஆனால் அதுவோதென்றலாய் தவழ்ந்து கொண்டுள்ளதுஇருந்தும் இல்லாதது போல்ஒரு வேசம் போட்டுள்ளதுஇல்லாதோருக்கு அது இல்லாமலேபோய்விட்டதுஇருப்போருக்கோ காலடியில்கிடக்கிறதுநீதியின் பிடி இறுக்கும்போதுதான்நல்லவர்கள் நடமாட முடியும்..இங்கு நல்லவர்கள் நடமாட வழியேஇல்லைஏனெனில் நீதிப்பெண்கண்களைக் கட்டிக்கொண்டுஅவர்கள் கைக்கு எட்டாத்தூரத்தில்ஒளிந்து கொண்டுள்ளாள்..அழைப்போரின் குரலோஅழுவோரின் கண்ணீரோஅவளை அசைக்கப் போவதில்லை..ஏனெனில் அவளுக்கு ஜீவனுள்ளதாஇல்லையா என்பதுஅவளுக்கே மறந்து போய்விட்டது...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.