நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

புதையல்: பாவலர் கருமலைத்தமிழாழன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

உழைப்பதற்குப்  பெரும்சக்தி   புதைய   லாக            உடலுக்குள்   இருப்பதினை   அறிந்தி  ருந்தும்பிழைப்பதற்குப்   பிறர்பொருளைத்   திருடு   கின்ற            பிழைதன்னைச்   செய்கின்ற   கயவர்   ரெல்லாம்தழைத்திங்கே   உயர்வதினைத்   தடுத்தி   டாமல்            தலைவணங்கி   அவர்க்கடிமை   செய்ய   லாமாஅழைப்பிங்கே   யார்தருவார்    ஒன்று   சேர்ந்தே            அடித்தவரை   நாளெல்லாம்   உழைக்க   வைப்போம் !அன்பென்னும்   புதையலினை   அகத்துள்   வைத்தும்            அழகென்னும்   புதையலினை   அங்கம்   வைத்தும்புன்னகையாம்   புதையலினை   உதட்டுள்   வைத்தும்            பூத்தமலர்   பெண்மையினை   மணப்ப  தற்குக்கன்னலினைத்  தின்னகூலி   கேட்கும்   ஆண்மைக்            கயவர்க்குத்   தலைவணங்கிக்   குனிய   லாமாதன்மானம்   யார்தருவார்   பெண்க   ளெல்லாம்            தழலாக   எழுந்தாலே    எல்லாம்   மாறும் !அருஞ்சங்க   நூல்களென்னும்   புதையல்   தன்னை            அழகாக   வீட்டிற்குள்   அடுக்கி   வைத்தேதெருவினிலே   எச்சிலிலை   நக்கு   தற்குத்            தெருநாய்போல்   பிறமொழிக்காய்   ஏங்க   லாமாகருவாகப்   பாண்பாடு  ஒழுக்கத்   தோடு           கலந்தொன்றாய்   அறிவியலும்    உள்ள  செம்மைபெருமைமிகு    தமிழ்மொழியைப்   போற்ற  சேர்ந்தே            பேரறிவைப்   பெற்றுநம்மின்   காலில்   நிற்போம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.