நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

புதையல்: கீழப்பெருமழை விஜய்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

புதையலைத் தேடியிங்கு பொழுதெலாம் அலையும் கூட்டம்​புதல்வரையே கூட புதையலுக்காய் கழுத்தறுக்கும்-ஈனத்தைஎங்கு சொல்ல! எப்படித்தான் இவர் மனத்தில் கோரமாய்இவ்வெண்ணங்கள் கொழுந்து விட்டெறிகின்றனவோ?!உழைத்தலே வாழ்விலென்றும் உயர்ந்திடும் உபாயமென்று கலைத்தொழில் பல கற்றோரிங்கு கழன்றனர்!-அவர் அனுபவமேஉண்மையில் நமக்கு வாழ்வின் உரைகல்லாய் நின்றிலங்கும் உறுதியாய்ப் பற்றிக் கொண்டால் உயர்வென்றும் நிச்சயமே!புதையலால்  வாழ்வு மட்டுமல்ல! வரலாறும் வளமை காணும்!முன்னோரின் வாழ்க்கை ஏற்றம் முழுதாய் அதில் துலங்கும்!-பின்னாளில்வாழும் நம்மின் மாற்றங்கள் நலதா?தீதா?என்றேயுணர்ந்திட   இதுவொன்றே நல் உபாயம்!தானாக க் கிடைத்தாலே அது புதையல்! அது விடுத்துநாமாக அடைய எண்ணி நயவஞ்சகங்கள் செய்து-போராடிஉயிரை மாய்க்கும் பொருந்தாதனவற்றைச் செய்தால்பேடி என்ற பெயரொன்றே பேருலகில் நிலைத்து நிற்கும்!மனித வாழ்வே புதையலென்று மகிழ்வுடனே ஏற்றிட்டால்பூவுலகே புனிதமாகும்!புகழுடைய பெரியோரெல்லாம்-கை குலுக்கி உன்னையிங்கு களிப்படையச் செய்திடுவார்!என்றைக்கும் மகிழ்ந்து நீஇருந்திடலாம் பெருமைமிகு சிறப்புடனே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.