நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

செல்லாக்காசு! விஜய்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

செல்லாக் காசுகள் தானிங்குசெப்புகின்றன வரலாற்றை!முன்னாளில் வாழ்ந்தோரின்முத்தான வாழ்முறையைசத்தான வாழ்க்கையினைசரியாக அவையுணர்த்தும்!செல்லும் காசுகளோ...சில நாட்கள்தான்  நம் வசம்!வட்ட மாயிருப்பதால் அது...வலம் வந்து கொண்டிருக்கும்-எங்கும் தங்காமல்...-எவரிடமும் நிலைக்காமல்!செல்லாத காசுகள்தான் சிறப்பான நம் பெட்டகத்தைஎன்றைக்கும் நிறைத்திருக்கும்!சங்க காலப் பெண்டிர் போல்...சரியான கற்புடனேநம்மைச் சார்ந்திருக்கும்!செல்லாக் காசாய் சில பேர்இருந்திட்டால் தீங்கில்லை!பலராய் வளர்ந்தால்தான்பாதிப்படையும்  பொருளாதாரம்!எல்லாக் காசும் செல்லாதானால்இனிதாய் வரும் புதுக் காசு!காசு பணம் கொண்டேகவினுலகம் வாழ்கிறது!செல்லாக் காசையும்செல்லுவதாய் மாற்றும் திறன்கொண்டோரே இவ்வுலகில்கொடி கட்டி வாழ்கின்றனர்!நல்லோரெல்லாம் இன்றுநலிவடைந்த  செல்லாக்காசாய்பெட்டிக்குள் அடைந்ததனால்...புதுக் காசுகளின் ஆட்டம் புவியை    ஆட்டுவிக்க...புது டெல்லியும் குலுங்குகிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.