செல்லாக் காசு: ஆர்.அருண்குமார்.


கையில் இருக்கும் வரைதான்
காசுக்கு கௌரவம்.
வில்லை விட்டு போன அம்பாய்
திரும்பி வராது.
ஏழைகள் முதல் கோமான் வரை
சென்று திரும்பும்
ஒரே பொருள் காசு.
ஏற்றமும் இறக்கமும் உண்டு
பரம பத விளையாட்டாய்.
நவரசத்தையும் தருவதும்
நடுத்தெருவில் நிறுத்துவதும்
இந்த காசுதானே.
செல்லாத இடமில்லை.
என்பதால்தான் இன்றைக்கு அதை
செல்லாக் காசு என்கிறோம்.
இருக்கும் வரை மகிழ்ச்சி.
இல்லாதபோது இகழ்ச்சி.
நேற்றுவரை இனித்தாய்.
இன்றோ நீ கசந்தாய்.
வாழ்வும் அப்படித்தான்
புரிந்துகொள்ள உதவினாய்
நன்றி செல்லாக்காசே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...