அழுத கண்ணீர் : ம.அஹமது நவ்ரோஸ் பேகம்


காயங்களின் காரணமாக உருவமுள்ள உறுப்புகளில்
இருந்து செந்நீர் வடிதல் போல், உருவமில்லா
மனதின் காயங்களால் கண்களில் இருந்து கண்ணீர் வடியும்.
அழுவது கண்கள் என்றாலும் கண்ணீரும் அழும்.
தூங்காமல் விழித்திருக்கும் துயரங்களைத்
தாலாட்டித் தூங்க வைத்து கன்னங்களின்
மேடுகளில் உப்பளங்களாகும் அழுத கண்ணீர்.
அடங்காமல் பெருக்கெடுத்து ஓடும்
அழுத கண்ணீரை அடக்க முடியாமல்,
இமை அணைகள், வீக்கமாகித் தம் தோல்வியை
ஒப்புக் கொண்டு,கண்ணீரின் துயரத்தில் தாமும் பங்கு கொள்ளும்..
தேற்றுவோர் யார் யாரோ இருந்தாலும் அழுத
கண்ணீரே ஆறாத துயரங்களை ஆற்றுப்படுத்தி
தானும் கண்களுக்குள் அடங்கும்.
உடலின் காயங்களை ஆற்றும் மருந்து போல்
ஆறாத மனதின் துயரங்களுக்கு
அழுத கண்ணீரே உற்ற தோழன்
போல இதமான மருந்தாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...