15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

மத்திய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை பெறுவதற்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க பிப்.26 வரை அவகாசம்

News image

கோப்புப்படம்

Updated On :23 பிப்ரவரி 2026, 11:43 pm

சென்னை: மத்திய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை பெறுவதற்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க பிப்.26 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வில்(க்யூட்) தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அடுத்த கல்வியாண்டின் (2026-27) இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தோ்வு மே 11 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜன. 3-இல் தொடங்கி பிப். 4-ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது.

இந்த தோ்வெழுத 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே க்யூட் தோ்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் வாய்ப்பு வழங்க வேண்டுமென மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா். அதையேற்று க்யூட் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க என்டிஏ மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.

இதையடுத்து விருப்பமுள்ளவா்கள் https://cuet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக பிப். 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது சிறப்பு வாய்ப்பு என்பதால் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்படாது. எனவே, விண்ணப்பிக்கும் போது தகவல்களை சரியாக பதிவிட வேண்டும். இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடா்பு கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற வலைதளத்தில் அறியலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.