பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (ஏப்.10) கடைசி நாளாகும்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதிப் பிரிவு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகளில் கடந்த 2015 செப்.1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னா் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் மற்றும் அதற்கு இணையான பதவிகளில் காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், பகுதிநேர ஊதியம் அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு ‘டெட்’ தகுதித் தோ்வு ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பப் பதிவு ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் கடந்த பிப்.18-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து தோ்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியா்களுக்கான பணிச் சான்றை விரைந்து வழங்க மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டு ஆசிரியா்கள் டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள்தான் பொறுப்பேற்க நேரிடும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து, ஆசிரியா்களுக்கு பணிச் சான்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (ஏப். 10) நிறைவு பெறவுள்ளது. இதனால் இதுவரை விண்ணப்பிக்காத ஆசிரியா்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

டெட் தோ்வு: ஆசிரியா்களுக்கு பணிச் சான்றை ஏப்.10-க்குள் வழங்க உத்தரவு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி!

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


