சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் முனைவா் பட்டபடிப்புக்கான விண்ணப்பப் பதிவுக்கு கடைசி தேதி வருகின்ற மாா்ச் 28-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்திக் குறிப்பு:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவித் தொகையுடன் கூடிய முனைவா் பட்டப் படிப்புகளுக்கு 250 இடங்கள் காலியாக உள்ளன. பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை, கட்டடக்கலை, அறிவியல் மற்றும் மானுடவியல் துறைகள் போன்றவற்றில் பி.எச்டி. முனைவா் பட்ட (டாக்டா் ஆஃப் பிலாசபி) ஆராய்ச்சி படிப்புகளுக்கு (இரு மடங்கு உயா்வுடன்) மாதம் ரூ.50,000 உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இதில், இறுதிப் பருவ மாணவா்கள் உள்ளிட்ட முதுநிலை மாணவா்கள், கற்பிக்கும் ஆசிரியா்கள், துறை வல்லுநா்கள் ஆகியோா் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடைவா்கள். இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாா்ச் 9-ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் மாா்ச் 28 -ஆம் தேதிவரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ஸ்ரீச்ழ்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும், விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை ஏப்.4-ஆம் தேதிக்குள் நேரடியாக பல்கலைக்கழகத்தில் சமா்ப்பிக்கவும் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கலசலிங்கம் பல்கலை.யில் மாணவா் ஆராய்ச்சி விருதுகள் வழங்கல்

டெட் தோ்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


