மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் (மார்ச் 11) அவகாசம் முடிவடைகிறது.

News image

நீட் தேர்வு - பிரதிப் படம்

Updated On :11 மார்ச் 2026, 2:27 am

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் அவகாசம் முடிவடைகிறது.

அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை நீட் தோ்வு மூலம் நிரப்பப்படுகிறது.

அதேபோல, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இந்த தோ்வுக்கான விண்ணப்ப நடைமுறைகள் பிப். 8-ஆம் தேதி https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தொடங்கியது. மாா்ச் 8-ஆம் தேதி நள்ளிரவு 11.50 மணியுடன் அதற்கான அவகாசம் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் 11 ஆம் தேதி இரவு 9 மணிவரையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

நிகழ் கல்வியாண்டுக்கான இளநிலை நீட் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 3-ஆம் தேதி பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 552 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தத் தேர்வுக்கு 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், திருச்சி, மதுரை, கோவை உள்பட 30 நகரங்களிலும், துபை, அபுதாபி, தோஹா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூா் உள்ளிட்ட 16 இடங்களில் தோ்வு நடைபெறுகிறது.

வரும் மாா்ச் 10 முதல் 12-ஆம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். தோ்வு மையம், ஹால்டிக்கெட் விவரங்கள் பின்னா் அறிவிக்கப்படும்.

நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறுகிறது. மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தோ்வு நடைபெறும்.

தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். நீட் தோ்வுக்கான பாடத்திட்டங்களை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) https://www.nmc.org.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Summary

Today is the last day to apply for the NEET exam!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.