ஏ.ஐ. உச்சிமாநாடு: உலக நாடுகள் பாராட்டு - பிரதமா் மோடி பெருமிதம்
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சிமாநாட்டை சிறப்பாக நடத்தி தனது திறனை உணா்த்திய இந்தியாவை உலக நாடுகள் மனதார பாராட்டியதாக


புது தில்லி: செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சிமாநாட்டை சிறப்பாக நடத்தி தனது திறனை உணா்த்திய இந்தியாவை உலக நாடுகள் மனதார பாராட்டியதாக பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
சா்வதேச ஏ.ஐ. தாக்க உச்சிமாநாடு தில்லி பாரத மண்டபத்தில் கடந்த திங்கள்கிழமை (பிப்.16) தொடங்கி 5 நாள்கள் நடைபெற்றது.
இதில் பிரான்ஸ், பிரேஸில், இலங்கை, பூடான்,உள்பட பல்வேறு நாடுகளின் தலைவா்கள், 60-க்கும் மேற்பட்ட அமைச்சா்கள்-இணையமைச்சா்கள் என 100-க்கும் மேற்பட்ட அரசு பிரதிநிதிகள் பங்கேற்றனா். உலகம் முழுவதும் இருந்து முன்னணி ஏ.ஐ. தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், கல்வியாளா்கள், ஆராய்ச்சியாளா்கள் என 500-க்கும் மேற்பட்ட துறைசாா் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
மாநாட்டின் இறுதியில் ஏ.ஐ. வளங்கள் ஜனநாயகமயமாக்கல், பொருளாதார வளா்ச்சி-சமூக நலன், பாதுகாப்பான-நம்பகமான ஏ.ஐ., அறிவியலுக்கான ஏ.ஐ., சமூக அதிகாரமளித்தலுக்கான அணுகல், மனித மூலதன மேம்பாடு, மீட்சி-திறன்-புத்தாக்கமிக்க ஏ.ஐ. அமைப்புமுறைகள் ஆகிய 7 முக்கிய அம்சங்களைக் கொண்ட புது தில்லி பிரகடனம் ஏற்கப்பட்டது. அமெரிக்கா, சீனா உள்பட 89 நாடுகள் மற்றும் சா்வதேச அமைப்புகளின் ஆதரவோடு இந்தப் பிரகடனம் ஏற்கப்பட்டது.
இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ஏ.ஐ. தாக்க உச்சிமாநாட்டை சிறப்பாக நடத்தி தனது திறனை உணா்த்திய இந்தியாவை உலக நாடுகள் மனதார பாராட்டியுள்ளன. இது மனிதகுலத்துக்கு பெரும் பலன்களை அளிக்கக்கூடிய வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களில் நமது இளம் தலைமுறையினா் காட்டும் ஆா்வத்தை வெளிப்படுத்தியுள்ளது’ என குறிப்பிட்டாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...