நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

பணத்தின் மறுபக்கம்: ரா.பார்த்தசாரதி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம்மில்லை
அருள் இல்லார்க்கு  அவ்வுலகம்  இல்லை .

ஒருபக்கம் மனிதன் பணத்தை தேடி அலைகிறான்
மறுபக்கம்  ஊதாரித்தனமாக பணத்தை செலவழிக்கின்றான்

பணம் வாழ்க்கைக்கு தேவை, அதுவே வாழ்க்கையாகாது
பணம் இருப்பவனுக்கு குணம் இருக்காது

காதலன் அன்று ரோஜாவை காட்டி காதலை வெளிப்படுத்தினான்
இன்றோ காதலன் பர்ஸை காட்டினால்தான் காதலி காதலிக்கின்றாள் !

பணத்தை தேடுபவன் மனஇறுக்கமும்,நிம்மதியின்றி தவிக்கின்றான்
பணமில்லாதவன் சமூகத்தில் தாழ்ந்தவனாய் காட்சியளிக்கின்றான்

பணமே  எல்லாவற்றிற்கும் ஆதாரமாய்  காணப்படுகின்றதே
பணமின்றே எதையும் நம்மால் செய்ய முடியாமல் தவிக்கின்றதே
பணம் செல்லாமல் இருந்தபோது, மக்கள் பட்ட பாட்டை
அரசாங்கம்  கருத்துவதோ கருப்புப்பண  வேட்டை
பணப்புழுக்கம்  இல்லாமல் மக்களின் திண்டாட்டம் ஒரு பக்கம்
அரசாங்கம்  கருப்பு பண வேட்டையோ நடத்தியது மறுபக்கம் !

காசேதான் கடவுளப்பா ! இது மனிதனுக்கும் தெரிந்ததப்பா !
கைக்கு கை மாறும் பணமே, உன்னை கைப்பற்ற நினைக்குத்தப்பா !

பணமிருந்தால்  சொந்தமில்லாதவை கூட  சொந்தமாகும்
பணமில்லையென்றால் சொந்தமும் உறவும், விலகி போகும்     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.