2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பணத்தின் மறுபக்கம்: கவிஞர் இரா .இரவி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

பணத்தின்   மறுபக்கம் உழைப்பு உள்ளன பண்போடு உழைத்துப் பணம் ஈட்டுகின்றனர் !அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி  செய்திட அவசியம் தேவைப்படுகின்றது பணம் !நேர்மையான வழியில் வந்த பணம் நிம்மதியான துக்கம் தந்து மகிழ்விக்கும் !குறுக்கு வழியில்  வந்த பணம் குதூகலத்தை அழித்துக் கவலை தரும் !பணம் ஈட்டுவது தவறில்லை  ஆனால் பணம் பணம் என்று அலைவது தவறு !வந்த வருமானத்தில் சிறு பகுதியாவது வறியவர்க்கு உதவி செய்திட வேண்டும் !ஏழைகளுக்கு உதவுவதில் இன்பம் உண்டு ஈந்துப் பாரத்தால் அவ்வின்பம் தெரியும் !வாரி வழங்கிடும் வள்ளல் ஆகாவிடினும் வழங்கவே வழங்காத கஞ்சனாக வேண்டாம் !பணத்தைவிட உயர்வானது நல்ல குணம் பணக்காரனைவிட நல்லவனே  என்றும் வாழ்வான் !மனிதாபிமானம் மனதில் என்றும் இருக்கட்டும் மனிதனைவிட பணம் என்றும் பெரிதல்ல !அரசாங்கத்தால் அச்சடிக்கப்பட்ட காகிதம்தான் அதைத்தாண்டி வேறு ஏதும் சிறப்பில்லை !பணத்தாசையால் பலர் நிம்மதி இழந்தனர் பணத்தாசையால் பலர் உறக்கம்  இழந்தனர் !ஆசையே அழிவுக்கு காரணம்என்றார் புத்தர் ஆசையை அழிக்காவிடினும் குறைத்து வாழ்வோம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.