நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

01.11.1956: ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட தினம் இன்று!

ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு மொழி பேசும் மக்கள்  வாழும் பகுதிகளை பிரித்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும் ...

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

DIN

ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு மொழி பேசும் மக்கள்  வாழும் பகுதிகளை பிரித்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் மற்றும் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன் விளைவாக 1 நவம்பர் 1956 அன்று மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்படி (மொழிவாரி மாநிலங்களை பிரிக்கும் சட்டம்)  தெலுங்கு பேசும் முன்னாள் ஐதராபாத் சமஸ்தானம், சென்னை மாகாணத்தின் தெலுங்கு மொழி பேசும் பகுதிகளையும் இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது.

இந்தியாவிலேயே மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் இதுவே.  ஆந்திராவின் வடகிழக்கில் ஒரிசாவும் மேற்கில் கர்நாடகமும் அமைந்துள்ளன. தென் மாநிலங்களில் கர்நாடகாவுக்கு அடுத்து இதுவே பெரிய மாநிலமாகும். இந்திய மாநிலங்களில் இது இரண்டாவது நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது. கோதாவரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகள் ஆந்திரப் பிரதேசம் வழியாகப் பாய்கின்றன. அவற்றின் கழிமுகங்கள் காரணமாக அரிசி உற்பத்தியில் இம்மாநிலம் இந்தியாவில் சிறந்து விளங்குகிறது.

தற்போதைய தெலுங்கானா மாநிலத்தின் பகுதிகள் ஐதராபாத் சமஸ்தானத்தின் பகுதியாகவே இருந்தது, அதேபோல இராயலசீமா, கடற்கரை ஆந்திரா போன்றவை சென்னை மாகாணத்தின் பகுதிகளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.