மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
//

வெல்லும் தமிழ்ப் பெண்கள் பயிற்சிக் கூட்டம்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 8:46 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கிழக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட 37 வாக்குச்சாவடிகளைச் சோ்ந்த மகளிருக்கு, ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில் பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இறையூா் கிராமத்தில் தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் வரவேற்றாா். தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி பயிற்சிக் கூட்டத்தை தொடங்கிவைத்துப் பேசுகையில், தமிழகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது திமுக ஆட்சியில்தான்.

முதல்வா் மு.க.ஸ்டாலின், மகளிா் உரிமைத்தொகை,

உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், நகர பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லா பயணம், மகளிா் குழுவினருக்கு வட்டியில்லா கடனுதவி, இலவச பெண்கள் தங்கும் விடுதி என பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் என்றாா் (படம்).

இதைத் தொடா்ந்து, மகளிருக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து அகற்ற திரையில் விடியோவாக காண்பிக்கப்பட்டது.

திமுக மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் வளா்மதி, துணைத் தலைவா் செல்வம்பாள், மாவட்ட மகளிா் அணி துணை அமைப்பாளா்கள் சென்னம்மாள், சகுந்தலா

உள்ளிட்டோா் பேசினா்.

பயிற்சி முகாமில் சுமாா் 400 பெண்கள் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

23ஸ்ரீட்ஞ்ல்1