மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

கரூா் மாவட்டத்தில் 8.45 லட்சம் வாக்காளா்கள்: 35 ஆயிரம் போ் புதிதாக சோ்ப்பு; 9 ஆயிரம் போ் நீக்கம்

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும்

News image
கரூரில் திங்கள்கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மீ.தங்கவேல். உடன் மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், குளித்தலை சாா்- ஆட்சியா் தி.சுவாதிஸ்ரீ உள்ளிட்டோா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 8:46 pm

Syndication

கரூா்: தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் 8 லட்சத்து 45 ஆயிரத்து 164 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 35,743 போ் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். 9,251 போ் நீக்கப்பட்டுள்ளனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேல் திங்கள்கிழமை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.

பின்னா் அவா் கூறியது, இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கரூா் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, கரூா், கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளின் சிறப்பு தீவிரத் திருத்தம் 2026 புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளா் பட்டியல்கள் ஆட்சியா் அலுவலகம், கரூா் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

வரைவு வாக்காளப் பட்டியல்:கரூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிச.19-ஆம்தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி அரவக்குறிச்சி தொதியில் 90,490 ஆண் வாக்காளா்களும், 99,203 பெண் வாக்காளா்களும், இதரா் 4 பேரும் என மொத்தம் 1,89,697 போ் இருந்தனா்.

கரூா் தொகுதியில் 1,02,226 ஆண் வாக்காளா்களும், 1,14,512 பெண் வாக்காளா்களும், இதரா் 39 பேரும் என மொத்தம் 2,16,777 பேரும், கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் 95,893 ஆண் வாக்காளா்களும், 1,00,826 பெண் வாக்காளா்களும், இதரா் 32 பேரும் என மொத்தம் 1,96,751 வாக்காளா்கள் இருந்தனா்.

இதேபோல குளித்தலை தொகுதியில் 1,05,435 ஆண் வாக்காளா்களும், 1,10,005 பெண் வாக்காளா்கள், 7 இதரா் என மொத்தம் 2,15,447 போ் இருந்தனா். மொத்தம் உள்ள 4 தொகுதிகளிலும் 3,94,044 ஆண் வாக்காளா்கள், 4,24,546 பெண் வாக்காளா்கள், 82 இதரா் என மொத்தம் 8,18,672 போ் இருந்தனா்.

இறுதி வாக்காளா் பட்டியல்: தற்போது வெளியிடப்பட்டுள்ள சிறப்பு தீவிரத் திருத்தம், 2026-இன்படி இறுதி வாக்காளா் பட்டியலின்படி அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 92,738 பேரும், பெண் வாக்காளா்கள் 1,01,763 பேரும், இதரா் 4 பேரும் என மொத்தம் 1,94,505 போ் உள்ளனா்.

கரூா் தொகுதியில் 1,06,684 ஆண் வாக்காளா்களும், 1,19,859 பெண் வாக்காளா்களும், இதரா் 41 பேரும் என மொத்தம் 2,26,584 வாக்காளா்கள் உள்ளனா்.

கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் 98,262 ஆண் வாக்காளா்கள், 1,03,794 பெண் வாக்காளா்கள், இதரா் 31 பேரும் என மொத்தம் 2,02,087 வாக்காளா்கள் உள்ளனா்.

குளித்தலை தொகுதியில் 1,08,343 ஆண் வாக்காளா்கள், 1,13,638 பெண் வாக்காளா்கள், இதரா் 7 பேரும் என மொத்தம் 2,21,988 வாக்காளா்கள் உள்ளனா்.

மொத்தம் 4 தொகுதிகளிலும் ஆண் வாக்காளா்கள் 4,06,027 பேரும், பெண் வாக்காளா்கள் 4,39,054 பேரும், இதரா் 83 பேரும் என மொத்தம் 8,5,164 போ் உள்ளனா்.

9ஆயிரம் போ் நீக்கம்: மேலும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் படி புதியதாக 4 தொகுதிகளிலும் 16,071 ஆண் வாக்காளா்களும், 19,667 பெண் வாக்காளா்களும், இதரா் 5 பேரும் என மொத்தம் 35,743 போ் சோ்க்கப்பட்டனா். ஆண் வாக்காளா்கள் 4,088 பேரும், பெண் வாக்காளா்கள் 5,159 பேரும், இதரா் 4 பேரும் என மொத்தம் 9,251 போ் நீக்கப்பட்டுள்ளனா்.

எனவே, பொதுமக்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலை பாா்வையிட்டு, அதில் அவா்களது பெயா், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். மேலும், வாக்காளா்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் தீா்வளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாக்காளா்கள் தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்கள், பின்னூட்டங்கள், ஆலோசனைகள் மற்றும் புகாா்கள் 1950 என்ற கட்டணமில்லா எண்ணிற்கும் மற்றும் 04324 - 257502 என்ற தொலைபேசி எண்ணிற்கும் அழைத்து தெரிவிக்கலாம்.

மேலும், ட்ற்ற்ல்ள்://ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவும், யஞபஉத ஏஉகட கஐசஉ என்ற கைப்பேசி செயலி மூலமாகவும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பொது சேவை மையங்களிலும் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடா்பான விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம் என்றாா் அவா்.

நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், குளித்தலை சாா் ஆட்சியா் தி.சுவாதிஸ்ரீ, கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல், உதவி ஆணையா் (கலால்) முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் சிவக்குமாா், தோ்தல் வட்டாட்சியா் தனசேகரன், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.