டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சினிமா கேள்வி பதில்

கே – உங்களுக்கு சிலோன் ரேடியோ நிகழ்ச்சி பிடிக்குமா.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:11 pm

உமா ஷக்தி.

கே – உங்களுக்கு சிலோன் ரேடியோ நிகழ்ச்சி பிடிக்குமா விவிதபாரதி நிகழ்ச்சி பிடிக்குமா? ஜி.ஏ.கோமதி, திருச்சி

ப – இரண்டு நிகழ்ச்சிகளும் ஒலிபரப்படும் ரேடியோவை மூடி வைத்துவிட்டு அதன் அருகில் படுத்து உறங்கப் பிடிக்கும்.

***

கே – நீங்கள் விரும்பிப் படிக்கும் பத்திரிகை எது? – அலை விஜயா, கோவை - 1

ப – கோவில் கும்பாபிஷேகப் பத்திரிகை. அதில்தான் ஆபாசம் இல்லை.

***

கே – ஒருதலை ராகம் இளையவர்களின் முயற்சி எப்படி? – ஆர்.சந்திரசேகரன், சென்னை – 4

ப – மூத்தவர்களை யோசிக்க வைத்துவிட்டது!

***

கே –பாலுமகேந்திரா இனிமேல் திரை உலகில் எப்படி செயல்படுவார்? ஆர்.சுப்ரமணியம், பாப்பாங்குளம்

ப - அவர் இழந்தது நடிகை மனைவி ஷோபாவை மட்டும்தான். காமிராவையும் சேர்த்து அல்ல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.