டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆடல் அழகி ஜெயமாலினி!

தக தகவென மின்னும் வண்ணப் பொன்மேனியில் எலும்புகள் இருக்கின்றனவா என்று சந்தேகம். ஏனெனில்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:11 pm

உமா ஷக்தி.

தக தகவென மின்னும் வண்ணப் பொன்மேனியில் எலும்புகள் இருக்கின்றனவா என்று சந்தேகம். ஏனெனில் உடம்பை எப்படி எப்படியெல்லாமோ வளைத்து ஆனந்த, அற்புத நடனம் அல்லவா ஆடுகிறார் ஜெயமாலினி?

இவர் இல்லாத-அதாவது ஜிகுஜிகு நடனமாடாத தெலுங்குப் படங்கள் இல்லை. எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் இவரது நடனம் இடம்பெற்றுத்தான் இருக்கும்.

டைரக்டர் விட்டலாச்சாரியாவின் மந்திர, தந்திரப் படம் என்றால் ஜெயமாலினி தான் கதாநாயகி.

அவருக்கு அப்படி ஒரு ராசி.

‘அழகு இருக்கும் வரை ஆடு. ஆடமுடிந்த வரை ஆடு’ என்று எவரோ இவரிடம் உபதேசித்து இருக்கிறார். அதனால் ஜெயமாலினியின் சதங்கை ஒலி ஜல்ஜல்லென்று பல படங்களில் குலுங்கி ஜெயகோஷம் போட்டு வருகிறது.

இந்த இடத்தைப் பிடிக்க அகில இந்தியாவில் இன்னொரு ஆடும் அழகியால் இதுவரை ஏனோ முடியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.