தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி: தங்கம் விலை சரிவு!

அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அடுத்து தில்லியில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 600 குறைந்தது.

News image

தங்கம் கையிருப்பு - ANI

Updated On :22 மே 2026, 10:10 pm IST

புதுதில்லி: அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அடுத்து புதுதில்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 600 குறைந்து ரூ. 1.64 லட்சமாக வீழ்ச்சியடைந்தது. இருப்பினும், ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் தீர்க்கப்படாத பதற்றங்கள், வர்த்தகர்களை எச்சரிக்கையுடன் இருக்க வைத்தது.

உள்ளூர் சந்தை வர்த்தகர்களின் தகவலின் அடிப்படையில், கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, நேற்று முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 99.9 சதவீதத் தூய்மை கொண்ட தங்கம் 10 கிராமுக்கு ரூ. 600 குறைந்து ரூ. 1,64,900ஆக சரிந்தது.

இன்று தங்கத்தின் விலையில் லேசான சரிவு காணப்பட்டது. தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்கள் பெரும்பாலும், அமெரிக்கா - ஈரான் உறவுகள் சார்ந்த நிலையிலும், இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவையால் நிர்ணயிக்கப்படுகிறது.

எனினும், தங்கம் மற்றும் வெள்ளிச் சந்தையில், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 2,71,000 என்ற நிலையிலேயே மாற்றமின்றித் தொடர்ந்தது.

சர்வதேசச் சந்தையில், ஸ்பாட் தங்கத்தின் விலை அவுன்ஸுக்குச் சிறிதளவு குறைந்து 4,522.32 அமெரிக்க டாலராகவும், வெள்ளியின் விலை 1 சதவீதம் சரிந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 75.87 அமெரிக்க டாலராகவும் வீழ்ச்சியடைந்தது.

Gold prices retreated by Rs 600 to Rs 1.64 lakh per 10 grams in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.