தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

லென்ஸ்கார்ட் 4வது காலாண்டு லாபம் 7.5% சரிவு!

ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 7.5 சதவீதம் குறைந்து ரூ. 203.6 கோடியாக இருப்பதாக லென்ஸ்கார்ட் அறிவித்தது.

News image
Updated On :20 மே 2026, 7:32 pm IST

புதுதில்லி: இந்தியாவில் புகழ்பெற்ற கண் கண்ணாடி விற்பனை நிறுவனமாக லென்ஸ்கார்ட், மார்ச் 2026 உடன் முடிவடைந்த 4வது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 7.5 சதவீதம் குறைந்து ரூ. 203.6 கோடியாகப் இருப்பதாக இன்று அறிவித்தது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், நிறுவனம் ரூ. 220.1 கோடி ஈட்டியது.

மார்ச் வரையான காலாண்டில், செயல்பாடுகள் வாயிலாக கிடைத்த வருவாய், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 1,728 கோடியிலிருந்து 45.62 சதவீதம் உயர்ந்து, சுமார் ரூ. 2,516 கோடியாக அதிகரித்துள்ளது.

பங்குதாரர்களுக்கு நிறுவனம் எழுதிய கடிதம் ஒன்றில், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், கண்ணாடி விற்பனை எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 25.2 சதவீதம் வளர்ச்சி கண்டு 97 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மதிப்பாய்வுக்கு உட்பட்ட இக்காலாண்டில், இந்தியாவில் லென்ஸ்கார்ட் சராசரி விற்பனை விலை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 15.9 சதவீதம் உயர்ந்து ரூ. 1,865ஐ எட்டியுள்ளது.

சர்வதேசப் பிரிவிலிருந்து கிடைத்த வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 35.4 சதவீதம் உயர்ந்து ரூ. 1,054 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

2025-26 நிதியாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 297.3 கோடியிலிருந்து சுமார் 68 சதவீதம் உயர்ந்து ரூ. 501 கோடியாக அதிகரித்துள்ளது. செயல்பாடுகள் வாயிலான வருவாயும் ஆண்டுக்கு ஆண்டு 32 சதவீதம் அதிகரித்து ரூ. 8,814 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் 282 புதிய கடையை திறந்த நிலையில், 2026 நிதியாண்டில் கூடுதலாக 542 புதிய கடைகளை லென்ஸ்கார்ட் திறந்துள்ளது.

Summary

Lenskart reported a 7.5 per cent year-on-year decline in consolidated profit after tax to Rs 203.6 crore in the fourth quarter ended March 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.